2003ஆம் ஆண்டு அகமதாபாத் பூங்கா ஒன்றில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பை நிறுத்திவைத்து குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக குஜராத் மாநில அரசும் சிபிஐயும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.
இந்நிலையில், அந்த மனு மீதான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்க இருக்கிறது.