ETV Bharat / bharat

ஹஜ் 2021க்கான விண்ணப்பங்கள் விரைவில் : மத்திய அமைச்சர் தகவல் - மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி : 2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கான விண்ணப்பங்கள் விரைவில் வழங்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்கள் விரைவில் -மத்திய அமைச்சர் தகவல்...!

author img

By

Published : Sep 27, 2020, 4:17 AM IST

ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டியது இஸ்லாமிய முறைப்படி அவசியமாகும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியா நாட்டிலுள்ள மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இவ்வழக்கம் தடைபட்டது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் குறித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “ஹஜ் கமிட்டி மற்றும் பிற இந்திய அமைப்புகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் 2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் படிவங்களைத் தயார் செய்யும். அது மட்டுமின்றி ஹஜ் பயணம் குறித்து சவுதி அரேபியா விரைவில் தேவையான வழிகாட்டுதல்களை அறிவிக்கும் என நம்புகிறோம்” என்றார்.

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அலுவலர் மக்ஸூத் அகமது கான், “இந்திய ஹஜ் குழு, பிற அலுவலர்களுடன் ஹஜ் 2021ஆம் ஆண்டுக்கான திட்டமிடல் குறித்த கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான திட்டமிடல் குறித்து விவாதித்தோம். தற்போது நாங்கள் சவுதி அரேபிய அரசின் வழிக்காட்டுதல்களுக்காகக் காத்திருக்கிறோம். அதன் பின்னர் அடுத்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்திற்கு அனுப்புவதற்கான கொள்கைகள் குறித்தும் முடிவு செய்ய அக்டோபர் 19ஆம் தேதி மற்றொரு கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

ஹஜ் 2020க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்கள் அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு மீண்டும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் படிப்படியாக அனுமதி வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க...கோவிட்-19 முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை தெளிவுப்படுத்த கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.