ராஜஸ்தான் மாநிலத்தில் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அடையாளப்படுத்தி, தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், உடனடியாக இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றவில்லை என்றால், நாளை (நவம்பர் 1) முதல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று குஜ்ஜார் இன மக்களின் தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லா அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக குஜ்ஜார் இன மக்கள் அதிகம் வாழும் ராஜஸ்தானின் எட்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் மொபைல் இணைய சேவையும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) ஒதுக்கீட்டை 21 விழுக்காட்டிலிருந்து 26 ஆக உயர்த்தும் மசோதாவை ராஜஸ்தான் அரசு நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து 2018 டிசம்பரில், குஜ்ஜார் உள்ளிட்ட நான்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓபிசி இடஒதுக்கீட்டிலிருந்து ஒரு விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கவும் ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்தது.
இதையும் படிங்க: கடவுளே நினைத்தாலும் அனைவருக்கும் அரசு வேலை தர இயலாது - பிரமோத் சாவந்த்