ETV Bharat / bharat

நித்தியானந்தா பாஸ்போட்டை கண்காணித்து வருவதாக அகமதாபாத் காவல்துறையினர் தகவல் - அகமதாபாத் காவல்துறை தகவல்

அகமதாபாத்: வெளிநாடு தப்பியோடிய நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை கண்காணித்து வருவதாக அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நித்தியானந்தா
author img

By

Published : Nov 23, 2019, 9:20 AM IST

பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு ’பரமஹம்ச நித்தியானந்த தியான பீடம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா . இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 சிறுமிகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக நித்தியானந்தா மற்றும் அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது அகமதாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு சிறுமிகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நித்தியானந்தா வெளிநாடு தப்பியோடி விட்டார் என்ற தகவலையடுத்து காவல் துறையினர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள ஆசிரமத்தில் சுமார் ஐந்து மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அதில் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.

மாறாக செல்போன்களும், 10-15 லேப்டாப்கள் மட்டுமே கிடைத்தது. பின்னர் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வரவில்லை என்றும், பெண் சீடர்களே ஆசிரமத்தை நிர்வகித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரது பாஸ்போர்டை கண்காணித்து வருவதாக அகமதாபாத் ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் கே.டி. காம்ரியா தெரிவித்துள்ளார்.

அகமபதாபாத் காவல் துறையினரைத் தொடர்ந்து கர்நாடகா காவல்துறையினரும் நித்தியானாந்தாவைத் தேடி வருகின்றனர். பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரை கைது செய்ய கர்நாடகா உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் அம்மாநில காவல்துறையினர் அவரை பிடிக்க தவறியதால் தற்போது வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இந்நிலையில் நித்தியானந்தாவின் வழக்கறிஞர் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். நித்தியானந்தா வாரணாசி ஆசிரமத்தில் இருப்பதாகவும், விரைவில் அவர் அகமதாபாத் காவல் துறை முன்னிலையில் ஆஜராவார் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வெளிநாடுக்கு தப்பியோடிய நித்தியானந்தா - இறுக்கும் காவல் பிடி.....

Intro:Body:

dvsfgf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.