கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுக்க 21 நாள்களுக்கு மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 44 பேருக்கு கரோனா தொற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரகிறது. பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்துகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வடஇந்திய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் தொழிலாளர்கள் ஒன்பது பேருந்துகளில் காவலர்கள் உதவியுடன் அனுப்பப்பட்டனர். இதேபோல் அகமதாபாத் வைஷ்ணவதேவி கோயிலில் சிக்கியிருந்த 550-600 யாத்ரீகர்கள் காவலர்கள் உதவியுடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.
அந்த வகையில் குஜராத்தின் பல இடங்களில் சிக்கியுள்ள மக்களை அரசு அல்லது தனியார் வாகனங்கள் வழியாக சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க:ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு