இந்தியாவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் குஜராத் 2ஆம் இடத்தில் உள்ளது. இங்கு 3,548 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 394 பேர் குணமடைந்துள்ளனர். 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் குஜராத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், கரோனா தொடர்பான தகவல்களை வெளியிட தினமும் நான்கு முறை செய்தியாளர் சந்திப்பை அம்மாநில அரசு நடத்தியது.
செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் அதிகளவில் கூடுகின்றனர். இது கரோனா தொற்று ஏற்பட வழிவகுக்கும் என்பதால், செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்து, அதற்குப் பதிலாக பதிவு செய்த காணொலிகளை ஊடகங்களுக்கு அனுப்புமாறு, ஈடிவி பாரத் உள்ளிட்ட சில ஊடகங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இந்நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை குஜராத் மாநில அரசு ரத்து செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இனிமேல் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதைத் தவிர்த்து, சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட காணொலிகளை ஊடகங்களுக்கு அனுப்பியோ தகவல்களைப் பரிமாற, குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்றிலிருந்து தப்பித்த 297 பத்திரிகையாளர்கள்!