குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள ஹஜிரா பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் செயல்பட்டுவருகிறது.
நேற்று நள்ளிரவில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வாயுவின் முக்கிய பைப் லைனில் மூன்று இடங்களில் வெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவுப்பொருள் தயாரிக்கும் கிடங்கில் தீ விபத்து!