பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவிருந்த தேர்தல்கள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போனது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதில், தேர்தல் நடத்தவிருக்கும் மாநிலங்கள் அதுகுறித்த வழிகாட்டுதல்களை மூன்று நாள்களுக்குள் தயாரிக்கவேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அலுவலர்கள் (தலைமை நிர்வாக அலுவலர்கள்) சம்பந்தப்பட்ட மாநில / மாவட்டங்களில் பரப்புரை மற்றும் வாக்களிப்பு நடத்துவதற்கான விரிவான திட்டங்களைத் தயாரிக்கவேண்டும்.
இதில், தேர்தல்களின் போது நிலவும் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
மாநிலங்களின் நிலைமைகளையும், கருத்துகளையும் கேட்டபின், இந்திய தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக நேற்று அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பிகாரில் உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையம் சில ஆலோசனைகளை கோரியது.
கரோனா வைரஸ் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இரட்டை பாதிப்புகளுக்கு நடுவே பிகார் மாநிலத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா பதவி விலகல்!