ETV Bharat / bharat

படிப்படியாக அதிகரித்துவரும் பயணிகள் எண்ணிக்கை

மும்பை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக போக்குவரத்துத் துறைக்கு இந்தாண்டு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தபோதும், தீபாவளி பண்டிகையையொட்டி சராசரி பயண முன்பதிவு 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.

படிப்படியாக அதிகரித்துவரும் பயணிகள் எண்ணிக்கை!

author img

By

Published : Nov 4, 2020, 9:08 PM IST

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பயணச்சீட்டை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை சராசரியைவிட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஆன்லைன் பயண முன்பதிவுத் தளமான கோயிபோவின் தரவின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பயண முன்பதிவுகள் வாரந்தோறும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுவருகிறது. இளம் தம்பதிகள், நண்பர்கள் குழு உள்ளிட்ட பயணிகள் இந்தண்டு தீபாவளி பண்டிகையின்போது பயணங்களை மேற்கொள்ள அதிகளவில் திட்மிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது சற்று இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையும் வருவதையொட்டி நீண்ட நாள்களுக்குப் பிறகு தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள கோவா, கேரளா, கூர்க், டார்ஜிலிங் ஆகிய இடங்களுக்குச் செல்ல அதிகளவில் முன்பதிவு செய்வதாக கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின்போது, கோயிபோ இயங்குதளத்தில் இதுவரை செய்யப்பட்ட முன்பதிவுகளின்படி, பிரீமியம் அல்லது மிட் பிரீமியம் தங்கும் விடுதிகளில் 50 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான நகரங்களில் பணிபுரிந்துவரும் 20 முதல் 30 வயதிற்குள்பட்ட பயணிகள், ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் முதல்முறையாக விடுமுறையை எடுத்துக்கொண்டு தங்களது சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கோவா, உதய்பூர், மணாலி, ஜெய்ப்பூர், டார்ஜிலிங் உள்ளிட்ட பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு இடையில் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, டிக்கெட் முன்பதிவு செய்யும் இணைய தளங்கள் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.