ETV Bharat / bharat

ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் மற்றுமொரு ஊக்குவிப்பு திட்டம்?

டெல்லி: பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கிலும் மற்றுமொரு ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுவருவதாக நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 2, 2020, 11:16 AM IST

Updated : Nov 2, 2020, 1:18 PM IST

நிதித்துறை செயலாளர்
நிதித்துறை செயலாளர்

கரோனா வைரஸ் நோயால் பல்வேறு தரப்பினர் இன்னலுக்குள்ளானார்கள். அவர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு சார்பில் ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கிலும் மற்றுமொரு ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுவருவதாக நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மக்கள் தொகையில் எந்தெந்த குழுவினருக்கு எந்தெந்த உதவி எப்போதேல்லாம் தேவைப்படுகிறது அதனை எப்படி தீர்த்து வைப்பது என்பது குறித்த கள நிலவரத்தை கண்காணித்து வருகிறோம். தொழிற்சாலைகள், வர்த்தக கூட்டமைப்புகள், பல்வேறு அமைச்சகங்கள் ஆகியவையிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுவருகிறோம். அந்த ஆலோசனைகளை ஆராய்ந்த பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திட்டம் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து விவரிக்க முடியாது. ஆனால், அரசு திட்டமிட்டுவருகிறது. பொருளாதாரம் மீண்டு வருகிறது. நிலையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்தை ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜிஎஸ்டி வருவாய் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம், பொருளாதாரம் 4 விழுக்காடு வளர்ச்சி கண்டது. 95,480 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டது. மின் பயன்பாடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றிலும் வளர்ச்சி கண்டுள்ளோம். இணையம் மூலம் கட்டப்படும் கட்டண தொகை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதத்தை விட, இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 21 விழுக்காடு அதிகரித்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அண்டை மாநிலங்களால் தேசிய தலைநகரில் அதிகரிக்கும் காற்று மாசு

Last Updated : Nov 2, 2020, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.