தகவல் அறியும் உரிமை சட்டம் காங்கிரஸின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையருக்கு நிகரான அதிகாரத்தை மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு இச்சட்டம் வழங்குகிறது. பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய இச்சட்டத்தில், திருத்த வரைவு மசோதாவை ஆளும் பாஜக அரசு கடந்த 19ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றியது.
இதன்படி ஆர்டிஐ ஆணையரின் ஊதியம், பதவி காலம் உள்ளிட்டவற்றை இனிவரும் காலங்களில் மத்திய அரசு தீர்மானிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் இந்தச் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மாநிலங்களவைவில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றவிடக் கூடாது என சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக அவரது ஆதரவைக் கேட்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.