இதுகுறித்து அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், ''இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுகள் மக்களுக்கு எப்போதும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். பணமதிப்பிழப்பின்போது மக்களுக்கு சிந்திப்பதற்குக்கூட நேரம் கொடுக்காத மோடி, ஏன் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் தொற்று பற்றி முடிவு செய்ய இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார் என்பது ஆச்சரியமான ஒன்று.
இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் செய்த தவறையே நாமும் செய்துவருகிறோம். மக்கள் பொது இடங்களில் கூடுவது வைரஸ் தொற்று பரவுவதற்கு எளிதாக வழிவகுக்கும். இந்தியாவில் ரயில் சேவையை உடனடியாக தடை செய்திருந்தால், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்திருக்கலாம்.
கரோனா வைரஸ் பற்றிய அலட்சியம் மக்களிடம் மட்டும் இல்லை. அது அரசு நிர்வாக அளவிலும் அதிகமாகவே உள்ளது. கடந்த இரண்டு நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது. நமது நாட்டில் 50 ஆயிரம் மக்களில் ஒருவருக்கு மட்டுமே அரசு மருத்துவமனையில் படுக்கை வைத்துருக்கிறோம்.
கரோனா பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இத்தாலி அலட்சியமாக செயல்பட்டதால்தான் இப்போது அதற்கான விலையை அந்த நாடு கொடுத்துவருகிறது. இந்தியாவில் பொதுமக்கள் ஒன்றாக கூடுவதைத் தவிர்க்கவேண்டும். மக்கள் ஊரடங்கு அன்று மாலையில் கைகளைத் தட்டுவதைவிட, சமூகத்தைவீட்டு விலகி வீட்டில் அமைதியாக இருப்பதே உண்மையான தேசப்பற்று'' என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏன்?