உலகின் மிக நீளமான தரைவழி சுரங்கப்பாதை திட்டமான அடல் சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது, 'இதற்கு முன்தைய அரசுகள் நாட்டின் சில பகுதிகளை திட்டமிட்டே புறக்கணித்துவந்தன. தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சில மாவட்டங்களை வேண்டும் என்றே கிடப்பில் வைத்தன.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சூழல் இருக்காது. தற்போதைய அரசு அனைவருக்குமான அரசு. அனைவருக்குமான வளர்ச்சி என்பதை குறிக்கோளாகக் கொண்ட அரசு. வாக்குகளுக்காக இல்லாமல் மக்களின் வளர்ச்சிக்காவே திட்டங்கள் தீட்டப்படும். இனி எந்தவொரு இந்தியரும் இனி புறக்கணிப்பை சந்திக்கப்போவதில்லை.
நாட்டின் ஒடுக்கப்பட்டவர்கள், தலித் மக்கள், பழங்குடியினர் என அனைவருக்கும் அடிப்படை உரிமைகள், வசதிகளை மேற்கொள்ள அரசு உறுதி பூண்டுள்ளது. முந்தைய அரசுகள் தங்கள் சுயநலத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே சமரசம் செய்து கொண்டன' எனக் கூறினார்.
இதையும் படிங்க: 19 வகையான விதைகளை கொண்டு உருவாக்கிய மகாத்மா காந்தியின் உருவம்