ETV Bharat / bharat

பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவிய இஸ்லாமிய ஹீரோக்கள்: அலுவலருக்கு நோட்டீஸ்! - ஐஏஎஸ் அலுவலருக்கு நோட்டீஸ்

பெங்களூரு: கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த இஸ்லாமியர்கள் ஹீரோக்கள் என்று பதிவிட்ட கர்நாடக மாநில ஐஏஎஸ் அலுவலரிடம் விளக்கம் கேட்டு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Mohammed Mohsin
Mohammed Mohsin
author img

By

Published : May 3, 2020, 11:41 AM IST

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் பலர் குணமடைந்ததும், மற்றவர்களின் சிகிச்சைக்காகத் தங்களின் பிளாஸ்மாக்களை வழங்கினர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஐஏஎஸ் அலுவலரான முகமது மொஹ்சின் ஏப்ரல் 27ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானமாகக் கொடுத்துள்ளனர். இந்த ஹீரோக்களின் மனிதநேயம் குறித்த எந்த ஊடகமும் காட்டாது" என்று பதிவிட்டிருந்தார்.

கோவிட்-19 தொற்றால் உருவாகியுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இவரது இந்த ட்விட்டர் பதிவு பல ஊடகங்களில் செய்தியானதைத் தொடர்ந்து இது குறித்து ஐந்து நாள்களில் விளக்கமளிக்கக் கூறி கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Mohammed Mohsin
கர்நாடக அரசு அனுப்பியுள்ள நோட்டீஸ்

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடிவரும் இந்தச் சூழ்நிலையில் மாநிலத்தின் நல்லிணக்கத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் நபர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டாது என்று மாநிலத்தின் முக்கிய அலுவலர் ஒருவர் கூறினார்.

முகமது மொஹ்சின் தற்போது கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தில் செயலராக உள்ளார். இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஒடிசாவில் நடைபெற்ற பரப்புரையில் கலந்து கொள்ளவந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனைசெய்ய உத்தரவிட்டவர்தான் முகமது மொஹ்சின். அதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லோக்பால் உறுப்பினர் கரோனாவால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.