இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பசுமைத் தேசிய நெடுஞ்சாலை தாழ்வாரத் திட்டத்தின் (ஜி.என்.எச்.சி.பி.) கீழ் 780 கி.மீ. சாலைகளைப் புனரமைத்து மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ.) வழங்கிய இந்த ஒப்புதலில் ரூ.7,662.47 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்றாயிரத்து 500 கோடி (500 மில்லியன் டாலர்) உலக வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட உள்ளது.
இந்தச் சாலையானது இருபுறமும் பசுமையாக மேம்படுத்தப்படும். அத்துடன் சாலைகளைப் பத்தாண்டுகளுக்குப் பராமரிக்கும் திட்டங்களும் இதில் அடங்கும். இச்சாலைகள் தொழில்துறை பகுதிகள், விவசாயப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் வழியாகச் செல்கின்றன.
ஆகவே இத்திட்டம் மாநிலங்களுக்கு அதிக வருவாயையும் உள்ளூர் மக்களும் வருமானம் ஈட்டும் வகையிலும் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகல்!