முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சியினர் அனைவரும் குற்றவாளிகள் என மக்களிடம் உண்மைக்கு புறம்பான கருத்தை முன்வைத்ததாக குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால், எதை வேண்டுமானாலும் அமல்படுத்தலாம் என்ற சிந்தனை இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, வாக்காளர்கள் ஒரு கட்சியை மட்டும் ஆதரித்த வரலாறு தமது நாட்டுக்கே கிடையாது என்றும், இதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.