ETV Bharat / bharat

புத்தகம் வழங்காமல் தேர்வு துவக்கம் - புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்கம் கண்டனம் - Pondy Government

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்காமல் மாத தேர்வை தொடங்கியுள்ளது கண்டனத்துக்குரியது என்று புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து மாணவர்கள் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

Students parents association
author img

By

Published : Jun 26, 2019, 8:30 PM IST

புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பாட புத்தகங்கள் முறையாக வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளி பயிலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இன்று முதல் மாதத் தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து மைய மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி நாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவர்கள் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டேவருகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையே ஆகும்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு பாடம் கூட நடத்தாமல் மாத தேர்வு நடத்தினால் எப்படி மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். அரசு பள்ளியில் தேர்ச்சிகள் நிலை என்னவாகும். மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி கிராமப்புறங்களில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகர பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் நிலை உருவாகும்

இதே சமயத்தில் தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவித்து அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளுவது போன்று உள்ளது. எனவே அரசு உடனடியாக ஆசிரியர்களை நியமித்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் மூன்றாம் தேதி அன்று பெற்றோர்கள், மாணவர்கள் ,சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

Intro:புதுச்சேரியில் போதிய ஆசிரியர்கள் அரசு பள்ளியில் பற்றாக்குறை மற்றும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்காமல் அரசு மாத தேர்வை தொடங்கியுள்ளது கண்டனத்துக்குரியது என்று புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து மாணவர்கள் பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Body:புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் அரசு பள்ளிகளில் மாதத் தேர்வு துவங்கியது பாட புத்தகங்கள் வழங்காமல் உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு துவங்கி உள்ளது இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின

இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டர் மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் வி சி சி நாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசி அவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது இதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளி மாணவர்கள் இருந்தும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை

ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் சீருடை வழங்குவதும் இல்லை இதனால் தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் இந்த ஆண்டு இன்று முதல் அரசு பள்ளிகளில் மாத தேர்வு தொடங்கியுள்ளது அதிகப்படியான பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு படம் கூட நடத்தாமல் மாத தேர்வு நடத்தினால் எப்படி மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் எப்படி அரசு பள்ளியில் தேர்ச்சிகள் இருக்கும் இந்த நிலை நீடித்தால் தற்போது கிராமப் பள்ளிகள் அதிக அளவில் மாணவர் சேர்க்கை இல்லை என்ற காரணத்தால் அரசு பள்ளிகளை இழுத்து மூடப் பட்டு வருகிறது தற்போது உள்ள இந்த நிலையில் தொடர்ந்தாள் நகர பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் நிலை உருவாகும் ஆகவே புதுவை அரசு பள்ளிக் கல்வித்துறையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக ஆசிரியர்களை நியமித்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கேள்விக்குறியாகாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

புதுச்சேரி இயங்கும் தனியார் பள்ளிகளில் அதிகப்படியான பாடங்களை முடித்துள்ளார் பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி உள்ளனர் ஆனால் அரசு பள்ளிகளில் தேர்வு நடைபெறும் நிலையில் பாடப் புத்தகம் வழங்காமலும் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவித்து அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளுவது போன்று உள்ளது எனவே அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்க வேண்டும் இல்லை என்றால் வருகின்ற மூன்றாம் தேதி அன்று பெற்றோர்கள், மாணவர்கள் ,சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்

பேட்டி புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டர் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம்

Conclusion:புதுச்சேரியில் போதிய ஆசிரியர்கள் அரசு பள்ளியில் பற்றாக்குறை மற்றும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்காமல் அரசு மாத தேர்வை தொடங்கியுள்ளது கண்டனத்துக்குரியது என்று புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து மாணவர்கள் பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.