முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் திங்கட்கிழமை கூறியதாவது:
அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த உயர்வால் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும்.
1991ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தில் நடந்த கடும் சரிவுடன் தற்போது அதிக அளவு பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இறக்குமதியை பொறுத்தமட்டில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 8.37 விழுக்காடும், ஏற்றுமதியில் 2.21 விழுக்காடு சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்தால் நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னை உருவாகும்.
இதனை சரி செய்ய, விடை தெரியாமல் மோடி அரசாங்கம் தவிக்கிறது. மேலும் இந்த அரசு கொண்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் மோடி திடீர் ஆலோசனை