"கல்விதான் உலகில் சக்திவாய்ந்த ஆயுதம், அதன் மூலம் உலகையே மாற்ற முடிவும்" என்பது நெல்சன் மண்டேலாவின் பொன்மொழி. இந்த பொன்மொழிக்கு ஏற்ப கல்வி கற்க வயது ஒருபோதும் தடையில்லை என்பதை காட்டுகிறது உத்தரப் பிரதேசத்திலுள்ள ராம்கரன் பிரஜாபதியின் முயற்சி.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்கரன் பிரஜாபதி. 79 வயதாகும் இவர் துலாம் பங்கத்வா என்ற கிராமத்தில் பானை வளைக்கும் தொழில் செய்துவருகிறார்.
சிறுவயதில் குடும்பத்தில் நிலவிய கடும் வறுமை காரணமாக, இவரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது. இருப்பினும் கல்வி மீது தீராத காதல் கொண்ட இவர், 1997ஆம் ஆண்டு தனது 55ஆவது வயதில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தார்.
இருப்பினும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சியடைய வேண்டும் என்பதே இவரது மிகப்பெரிய ஆசை. அதை நிறைவேற்ற தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருக்கிறார் இந்த 78 வயது மாணவர்.
கல்வி கற்றால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்பதற்காகவே பள்ளி, கல்லூரிகளுக்கு பின் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தனது அறிவை பெருக்க சுய ஆர்வம் காரணமாக தேர்வுக்கு தயாராகும் இவரின் கனவு மெய்ப்பிக்க ஈடிவி பாராத் சார்பில் வாழ்த்துகள்!
இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை போதிக்கும் காஷ்மீர் சிவன் ஆலயம்