இயற்கை நமக்கு பல அதிசயங்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அவ்வப்போது வானில் தோன்றும் வால் நட்சத்திரங்களும் கிரகணங்களும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த வகையில், 5 கிரகங்களை வெறும் கண்களை பார்க்கும் அதிசய நிகழ்வு நேற்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆர்.சி கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " அரிய நிகழ்வு ஒன்று நேற்று (ஜூலை 19) நடைபெற்றுள்ளது. ஒரே இரவில் விண்வெளியில் உள்ள கிரகங்களை மக்களால் காண முடிந்துள்ளது. சூரிய உதயத்திற்கு ஏறக்குறைய அரை மணி நேரத்திற்கு முன்பு பிரகாசமான பளபளப்பில் வீனஸ்(venus) கிரகத்தை காண முடிந்திருக்கும்.
அதற்கு அருகில் புதன்(mercury) கிரகத்தையும், பிறை நிலவும்(crescent moon) இருக்கும். சாதரணமாக புதன் கிரகத்தை வெறும் கண்களில் பார்த்திட முடியாது. ஆனால், நேற்று வானம் தெளிவாக இருந்ததால் எளிதாக பார்க்க முடிந்தது. அதே போல், செவ்வாய்(MARS) கிரகமும் வானத்தின் நடுவில் தெரிந்திருக்கும். அதிலிருந்து மேற்கு திசையில் வியாழன்(Jupiter), சனி(saturn) கிரகங்களை காண முடியும். எனவே, ஐந்து கிரகங்களையும் ஒரே சமயத்தில் ஒன்றாக வானத்தில் காண முடிந்தது" என்றார்.