சிவ பக்தர்கள் கங்கையிலிருந்து புனித நீரை சேகரித்துக்கொண்டு சிவ ஆலயங்களுக்கு எடுத்துச்சென்று அபிஷேகம் செய்வார்கள். இந்த கண்கவர் யாத்திரையில் டெல்லி காந்திநகரை சேர்ந்த சுதீர் மக்கார் என்ற சாமியார் 20 கிலோ தங்கநகைகளை அணிந்தப்படி செவ்லார்.
இதனால், இவரை சீடர்கள் 'கோல்டன் பாபா' என செல்லமாக அழைக்கின்றனர். இவர் யாத்திரை செல்கையில் கஷ்டப்பட்டவர்களுக்கும், தன்னை வழிபடுவருக்கும் நகைகளை வழங்கி உதவி செய்வார்.
இந்நிலையில், தங்க பாபா (58) நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மே 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் தீவிர கண்காணிப்பிலிருந்த தங்க பாபாவுக்கு, புற்றுநோய், நீரிழிவு நோய், தைராய்டு , உயர் இரத்த அழுத்தம் ஆகிய பல பிரச்னைகள் இருந்ததால் உடல் உறுப்புகள் சிறிது சிறிதாக செயலிழக்க தொடங்கியதில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு சீடர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.