ETV Bharat / bharat

தங்கம் விலை நிலவரம் : 10 கிராமுக்கு ரூ. 761 அதிகரிப்பு - தங்கம் விலை 10 கிராமுக்கு ரூபாய் 761 அதிகரிப்பு

டெல்லி : தங்கம் 10 கிராமுக்கு ரூபாய் 761 அதிகரித்து, 48 ஆயிரத்து 414 ரூபாயாக உயர்ந்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் விலை நிலவரம் 10 கிராமுக்கு ரூபாய் 761 அதிகரிப்பு

author img

By

Published : Jun 17, 2020, 1:33 AM IST

நேற்று (ஜூன் 16) அமெரிக்க டாலருக்கு எதிராக, ரூபாய் மதிப்பு 17 பைசா குறைந்து ரூ.76.20 ஆக கடைசி நேரத்தில் முடிந்தது. தங்கம் 10 கிராமுக்கு ரூபாய் 761 அதிகரித்து, 48 ஆயிரத்து 414 ரூபாயாக உயர்ந்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி ஒரு கிலோ 47 ஆயிரத்து 896 ரூபாயிலிருந்து, கிலோ ரூபாய் 1,308 அதிகரித்து 49 ஆயிரத்து 204 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு ஆயிரத்து 731 அமெரிக்க டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 17.49 அமெரிக்க டாலராகவும் இருந்தது.

ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் (பொருட்கள்) தபன் படேல் கூறுகையில், "பத்திர கொள்முதல் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்ததை அடுத்து செவ்வாயன்று(ஜூன் 16) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

தங்க பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் பாதுகாப்பான புகலிட முறையீட்டில் மே மாதத்தில் ரூ.815 கோடி வரத்துக்களை ஈர்த்திருக்கிறது.

பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் கரோனா வைரஸ் நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிட விருப்பங்களை விரும்பியதால், தங்க பரிவர்த்தனை வர்த்தக நிதிகள், மே மாதத்தில் ரூ.815 கோடி நிகர வருவாயைக் கண்டதாக அறிய முடிகிறது.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அசோசியேஷனின் (அம்ஃபி) தகவல்களின்படி, மே மாதத்தில் தங்கம் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் ரூ.815 கோடி நிகரத் தொகை செலுத்தப்பட்டது. இது ஏப்ரல் மாதத்தில் நிகர வருவாய் ரூ.731 கோடியை விட அதிகமாகும்.

இருப்பினும், இந்த வகை மார்ச் மாதத்தில் ரூ.195 கோடி நிகர வெளியேற்றத்தைக் கண்டுள்ளது.

இதற்கு முன்னர், தங்க பரிவர்த்தனை-வர்த்தக நிதியாக பிப்ரவரியில் 1,483 கோடி ரூபாயும், ஜனவரியில் 202 கோடி ரூபாயும் வந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.