புதுச்சேரி மதகடிப்பட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஜெகதாம்மாள்(70). துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பேச்சு கொடுத்துள்ளனர். முதலில் தாங்கள் ஏழைகளுக்குக் கரோனா நிவாரண நிதி வழங்க வந்திருப்பதாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
முதலில் படம் எடுப்போம், அடுத்துப் பின்னால் வரும் அலுவலர்கள் பணத்தை வழங்குவார்கள் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி செல்போனில் படம் பிடிக்க ஒத்துக்கொண்டுள்ளார். அப்போது, ”கழுத்தில் தங்கச் சங்கிலியைப் பார்த்தால் ஏழை என்று நம்ப மாட்டார்கள், அதனால் அதனைக் கழட்டி கீழே வையுங்கள்” என்று அந்நபர்கள் கூறியுள்ளனர்.
மூதாட்டி சங்கிலையைக் கழற்றி கீழே வைத்த உடன் தண்ணீர் கேட்டு அந்நபர்கள் அவரைத் திசை திருப்பியுள்ளனர். மூதாட்டி தண்ணீர் எடுக்கச் சென்ற கண நேரத்தில் ஒருவர் சங்கிலியை எடுத்துள்ளார். அதன்பின், மூதாட்டி வந்தபிறகு அவரைப் படம் எடுத்துவிட்டு, பின்னால் அலுலர்கள் பணம் தருவார்கள் என்று கூறி இருசக்கர வாகனத்தில் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்துதான் தன்னுடையை 10 சவரன் தங்கச் சங்கிலியை, அந்நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் என மூதாட்டிக்குத் தெரி்யவந்துள்ளது. இதையடுத்து நகையைத் திருடியவர்களைப் பிடிக்கக்கோரி திருபுவனை காவல் நிலையத்தில் மூதாட்டி ஜெகதாம்பாள் புகாரளித்துள்ளார்.
இதையும் படிங்க: தந்தை - மகன் இறந்த வழக்கில் டிஜிபி, எஸ்பி ஆஜராக உத்தரவு