கோவா டபோலிம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் கடற்படையை சேர்ந்த மிக்-29கே ரக போர் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்திலிருந்த எரிபொருள் டேங்க் கீழே விழுந்தது. அதிலிருந்த எரிபொருள் கசிந்ததில் அப்பகுதியில் தீப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டனர். இதனால் கோவா டபோலிம் சர்வதேச விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்படுவதாக என்று இந்திய விமான நிலையம் அறிவித்திருந்தது.
விமான நிலையத்தின் ஓடுபாதையின் முக்கிய பகுதி முழுவதும் தீ சூழ்ந்த நிலையில் விமானம் தரையிறங்குவதில் சிறிய சிக்கல் ஏற்பட்டதாக கடற்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் டி.கே.ஷர்மா கூறியுள்ளார்.