பிகாரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 23ஆம் தேதி அக்கட்சி வெளியிட்டது. அங்குள்ள பாட்னா சாஹிப் தொகுதியில், தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஆர்.கே.சின்ஹாவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவி சங்கர் பிரசாத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனால் ஆர்.கே.சின்ஹாவின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இன்று பாட்னா விமான நிலையம் வந்த ரவி சங்கர் பிரசாத்திற்கு எதிராக 'கோ பேக் ரவி சங்கர் பிரசாத்' என்றும்', 'ஆர்.கே.சின்ஹா ஜிந்தாபாத்' என்றும் கோஷமிட்டனர்.
இதனால் அங்கு கூடியிருந்த ரவி சங்கர் பிரசாத் ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது சத்ருகன் சின்ஹா இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.