உலகெங்கிலும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இரண்டு கோடியே 80 லட்சத்து 14 ஆயிரத்து 827க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்பது லட்சத்து ஏழு ஆயிரத்து 304 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இரண்டு கோடியே 91 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இந்த கரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவரை 65 லட்சத்து 49 ஆயிரத்து 475 க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 239 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயித்து 653 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மூன்றாவதாக இந்தியாவில் 75 ஆயிரத்து 91 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகபடியாக உள்ளது.
மேலும் மெக்ஸிகோ, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.