சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.
கரோனாவால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 22 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் 7ஆவது இடத்திலும், உயிரிழப்பில் 3ஆவது இடத்திலும் மெக்சிகோ உள்ளது. இதுவரை 5 லட்சத்து 63 ஆயிரத்து 705 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60ஆயிரத்து 800 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 61 ஆயிரத்து 151 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 32 லட்சத்து 34 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஆகஸ்ட் 23) ஒரே நாளில் 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 59 ஆயிரத்து 449 பேர் ஆக உயர்ந்துள்ளது
உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. இரண்டாவதாகப் பிரேசில், அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
இதையும் படிங்க: உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் கரோனா பாதிப்பை குறைக்கிறது - ஆய்வில் தகவல்!