உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 லட்சத்து 65 ஆயிரத்து 173-ஐ எட்டியுள்ளது. தற்போது குணமடைந்தவர்கள் 29 லட்சத்து 3 ஆயிரத்து 382 பேரும், இறந்தவர்கள் 3 லட்சத்து 77 ஆயிரத்து 397 பேரும் உள்ளனர்.
சீனாவில் தற்போது புதிதாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனா தங்களது பொருளாதாரத்தை சாதாரண நிலைக்கு மாற்ற பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் இந்த வாரம் பள்ளிகளைத் திறந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மத்திய சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஏற்பட்டது போல், தற்போது ஏற்படாமல் இருக்க தகுந்த இடைவெளியைப் பின்பற்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊரடங்கு அறிவித்த ஜனவரி 23ஆம் தேதிக்கு முன்னர், மக்களைக் கட்டுப்படுத்த சீனா தவறியது என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இதனை எதிர்க்கும் விதமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் சரியான முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த கரோனா தொற்று பெரும்பாலான மக்களுக்கு மிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், முதியவர்களுக்கு, உடல் நலக் கோளாறு உள்ளவர்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மரணத்தையும் ஏற்படுத்துகிறது.