ETV Bharat / bharat

ரூ.103க்கு கோவிட்-19 பாதிப்பை குணப்படுத்த புதிய மருந்து - இந்தியாவில் அறிமுகமானது! - க்ளென்மார்க் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான க்ளென் சல்தான்ஹா

டெல்லி : கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃபேபிஃப்ளூ என்ற ஆன்டிவைரஸ் மருந்தை க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவிட்-19க்கு புதிய மருந்து - இந்தியாவில் அறிமுகமானது!

author img

By

Published : Jun 20, 2020, 7:27 PM IST

Updated : Jun 20, 2020, 7:46 PM IST

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் மூன்றாம் கட்ட பரவலை அடைந்திருக்கும் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையே தொடர்ந்து நீடித்துவருகிறது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இந்திய மருந்து நிறுவனமான க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ், மிதமான மற்றும் லேசான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக 'ஃபேவிபிரவைர்' என்ற அங்கீகரிக்கப்பட்ட மருந்து பெயரில் ஃபேபிஃப்ளூ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மருந்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் (டி.சி.ஜி.ஐ) உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக க்ளென்மார்க் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான க்ளென் சல்தான்ஹா கூறுகையில், "கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகின்ற இந்தச் சூழலில், எங்கள் நிறுவனத்தின் புதிய மருந்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் நோயாளிகளுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எங்களது இந்த புதிய மருந்து, ஓரளவிற்கு சிகிச்சை பலனை வழங்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஃபேபிஃப்ளூ மருத்துவப் பரிசோதனைகளின்போது லேசான மற்றும் மிதமான கோவிட்-19 நோயாளிகளுக்கு, உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃபேபிஃப்ளூ மருந்தானது, வாய்வழியாக செலுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நரம்பு வழியாக செலுத்தப்படும் பிற மருந்துகளைவிட மிகவும் வசதியான சிகிச்சை முறையில் செயல்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு ஃபேபிஃப்ளூ சென்றடைய க்ளென்மார்க் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. கோவிட்-19க்கு எதிரான போரில் அரசு மற்றும் மருத்துவ சமூகத்துடன் எங்கள் நிறுவனம் இணைந்து பணியாற்றும் என தெரிவித்துகொள்கிறேன்.

ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் என வரையறை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த மருந்து விற்பனை செய்யப்படும். நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உற்ற கரோனா வைரஸ் நோயாளிகளுக்கும், லேசான மற்றும் மிதமான கோவிட்-19 அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கும் இது பரிந்துரைக்கலாம். இது நான்கு நாள்களுக்குள் வைரஸ் பாதிப்பை விரைவாகக் குறைத்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் வழங்குகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா கோடைக்காலத்தில் குளிராக்கும் நிம்பு ஜூஸ் செய்முறை!

Last Updated : Jun 20, 2020, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.