மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அவருடைய தொகுதியான பெகுசாரை பகுதியில் மத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவர் (மம்தா பானர்ஜி) ஏற்க மறுக்கிறார். இதன் அர்த்தம் என்ன? இது ஒரு பொதுச்சட்டம். இது நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும்” என்றார்.
இதுமட்டுமின்றி தனியார் மிஷனரி பள்ளிகளில் மதமாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர், அதற்கு மாற்று மருந்தாக ஹனுமன் சாலிஷா, பகவத் கீதை போதனைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
மேலும் சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்தச் சட்டம்) விவகாரத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது புனிதப் போர் நடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் செயல்படுவதாக விமர்சனம் செய்தார்.
நிறைவாக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கேரளத்தில் அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், அதற்கு தனது கண்டனத்தையும் பதிவுசெய்தார்.
அண்மையில் கேரள ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராகக் கோஷங்கள் எழுந்தன. இதுமட்டுமின்றி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக காங்கிரசின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றும் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : இந்துக்கள் இந்தியாவுக்கு வராமல் இத்தாலிக்கா செல்வார்கள்?'