ETV Bharat / bharat

ஜிஎஸ்டி எண்ணை வெறும் 3 நாள்களில் ஒதுக்கும் புதிய ஏற்பாடு! - நிதி அமைச்சகம்

டெல்லி : நாட்டின் வர்த்தகப் பணிகளை எளிமையாக்கும் நடவடிக்கையாக ஜிஎஸ்டி எண்ணை வெறும் 3 நாள்களில் ஒதுக்கும் புதிய ஏற்பாட்டை உருவாக்கியுள்ளது என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி எண்ணை வெறும் 3 நாள்களில் ஒதுக்கும் புதிய ஏற்பாடு !

author img

By

Published : Aug 24, 2020, 9:10 PM IST

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடங்கப்பட்டதில் இருந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதற்கு முன் 65 லட்சம் பேர் வரி செலுத்திய நிலையில், தற்போது 1.24 கோடி பேர் வரி செலுத்தி வருவதாக அறியமுடிகிறது.

ஜிஎஸ்டியில் உள்ள அனைத்து நடைமுறைகளும் முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன.

எனவே, தற்போது புதிய ஜிஎஸ்டி பதிவுக்கு ஒரு நபர் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைத் தேர்வுசெய்தால் போதும். அந்த நபர் தனது வர்த்தகத்திற்கான பதிவெண்ணை மூன்று வேலை நாள்களுக்குள்ளாக பெற முடியும்.

புதிய பதிவுக்கான ஆதார் அங்கீகாரம் கரோனா பொருளாதார நெருக்கடிக்கு பின்பான வணிக வர்த்தக செயல்பாடுகளை எளிதாக்கும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உச்ச முடிவெடுக்கும் அமைப்பான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 14 ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 39ஆவது கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்பட்டது.

இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 முதல் நாடு தழுவிய பூட்டுதலை அறிவித்ததால் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வர சற்று காலதாமதம் ஏற்பட்டது.

நிதி அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையானது, உண்மையான மற்றும் நேர்மையான வரி செலுத்துவோருக்கு உதவும் என்றும் அதே நேரத்தில் போலி மற்றும் மோசடி நிறுவனங்களை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கி வைத்து கண்காணிக்கவும் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.