நோய்வாய்ப்பட்ட பலவீனமான மற்றும் வயது காரணமாக ஹுரியத்தை விட்டு வெளியேறுவது பற்றிய அவரது அறிக்கை கிட்டத்தட்ட அரசியலிலிருந்து வெளியேறுவதற்கு ஒப்பானது, இது குறைவான அல்லது மிகக் குறைவான அரசியல் எதிர்வினைக்கான வாய்ப்பை தந்துள்ளது. இந்த முடிவு காஷ்மீரில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கலாம், ஏனெனில் அவர் ஹுரியத் தலைவராக இறந்திருந்தால் மற்றொரு அமைதியின்மையை தூண்டக்கூடியவராக அவர் கருதப்பட்டார்.
முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் திட்டத்திற்கு காரணமாக இருந்த பாஜகவின் உயர்மட்ட பாஜக தலைவர் ராம் மாதவ் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஒரு முறை மட்டுமல்ல, மூன்று முறை 'கிலானி ஹுரியாட்டில் இருந்து ராஜினாமா செய்தார்' என்று ட்வீட் செய்யும் அளவிற்கு அரசுக்கும் மத்திய அரசு மட்டத்தில் காஷ்மீரை கையாளும் மக்களுக்கும் அவர் எளிதாக்கியுள்ளார்..
தனது முதல் ட்வீட்டை கிலானி இணைத்துள்ள கடிதத்துடன் ட்வீட் செய்த மாதவ், தனது மூன்றாவது ட்வீட்டில் ‘பள்ளத்தாக்கை பயங்கரவாதத்திற்கும் வன்முறையிலும் தள்ளுவதற்காக ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை தனியொரு நபராக அழித்த மனிதர்;. இப்போது ஒரு காரணத்தையும் கூறாமல் ஹுரியத்திலிருந்து ராஜினாமா செய்கிறார். எல்லா கடந்த கால பாவங்களிலிருந்தும் இது அவரை விடுவிக்குமா? ’என்று பதிவிட்டார். கீலானி கிட்டத்தட்ட ஒரு வருடமாக அமைதியாக இருந்தபோதிலும், அவரது அரசியல் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.
முன்பு மாநிலமாக இருந்த போது, மாநிலத்திற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தைக் கொடுத்த 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து கிலானியின் ஹுரியத்தின் அறிக்கை அல்லது அவரது அறிக்கைகள் சிறிய செய்திகளாக எப்போதாவது வெளிவந்தன. அவர் எந்த போராட்ட எதிர்ப்பு அறிக்கையையும் வெளியிடவில்லை. காஷ்மீரில் மற்றும் எல்லையைத் தாண்டி பணம் மற்றும் அதிகாரம் தொடர்பாக ஹுரியத் உறுப்பினர்களிடையே உள்ள சச்சரவு மற்றும் சண்டைகளை விவரிக்கும் ஆடியோ செய்தியுடன் கிலானியின் ராஜினாமா கடிதம் மக்களிடம் எவ்வித தடையும் இல்லாமல் சென்றடைந்தது. சில நிமிடங்களில் அது வைரலாகி மண்டல மற்றும் தேசிய செய்தி தளங்களின் தலைப்புச் செய்தியாக மாறியது.
அவரது ஹுரியத்தின் முழுப் பிரிவும் பிரிவினைவாதத்தை கைவிட்டுவிட்டதாகவும், இனி அவை பொருந்தமற்றது என்று தீர்மானித்திருப்பதாகவும் கடிதம் தெளிவாகக் கூறுகிறது. இதே தலைவர் தான், 2008ஆம் ஆண்டில் அமர்நாத் பிரச்சினையில் முழுமையான புகழை அனுபவித்தபோது, ஆட்சி உரிமை கோரினார். அவருக்கு இணையாக யாராவது இருக்கக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்ள கூட அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் அவரது மூத்த மகன் டாக்டர் நயீமை ஹுரியத்தின் வாரிசாக நியமிக்க அவர் சட்டப்பூர்வமாக கையெழுத்திட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது முழு பிரிவினைவாத முகாமில் ஒரு சலசலப்பை உருவாக்கி, பின்னர் அவர் அதை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியது.
இப்போது பிரிவினைவாதத்திற்கு எதிரான அரசாங்கத்தின் எதிர்வினைக்கு, குறிப்பாக ஆகஸ்ட் 5, 2019 முடிவுக்கு முன்னர், அவர் அனுபவித்த புகழ், குறைந்த முட்களால் நிரம்பியிருந்தது, ஆபத்து அதிகமாக இருந்ததில்லை
கிலானி எப்போதுமே அரசாங்கத்திற்கு எதிரான ஒரு விமர்சனக் குரலாக இருந்து வருபவர், வெளிப்படையாக அவரது சமரசமற்ற நிலைப்பாடு மற்ற பிரிவினைவாதிகளின் பார்வையை விமர்சன ரீதியாகப் பார்க்க அவருக்கு ஒருவித உரிமையைக் கொடுத்தது. 90களின் முற்பகுதியில் அல்தாஃப் அஹ்மத் என்றழைக்கப்படும் அசாம் இன்கிலாபி ஆயுதங்களை கைவிடும் முடிவை எடுத்த போது “சரணடைகிறார்” என்று அழைத்தவர் கிலானி தான். எந்தவொரு மோசடி குற்றச்சாட்டும் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் இருந்தவர்களிடம் இன்கிலாபிக்கு பிரச்சினைகள் இருந்தன. 2003ஆம் ஆண்டில் அசல் ஹுரியத்தில் இருந்து கிலானி பிரிந்தபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்று தலைமையை விற்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர் அவர் ஹுரியத்தின் மற்றொரு பிரிவைத் தொடங்கினார், அதை ‘புனிதப்படுத்தும் முறை’ என்று அழைத்தார்.
இந்தியாவின் முதன்மையான புலனாய்வு நிறுவனமான என்ஐஏ ஏற்கனவே அவரது மருமகன் உட்பட பல பிரிவினைவாதிகளின் பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் போது, மோசடி நடந்துள்ளதாக கிலானியே உறுதிப்படுத்தும் ஒரு கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்பது புதிராக உள்ளது.
கிலானியின் ராஜினாமா கடிதம் கிட்டத்தட்ட நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாகியுள்ளது. ஸ்ரீநகர் முதல் முசாபராபாத் வரை, அவரது ராஜினாமா கடிதம் குறித்து பல ஊகங்கள் உள்ளன, அதற்கு கிலானியின் பேத்தி ‘ஒருவர் சித்தாந்தம், அரசியல் நிலைப்பாடு, விசுவாசம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து ராஜினாமா செய்ய முடியாது’ என்று ட்வீட் செய்துள்ளார். இந்த செய்தி அநேகமாக கிலானியை ஹுரியாத்தில் இருந்து வெளியேற்ற முயற்சித்த, கிட்டத்தட்ட வெற்றி பெற்றவர்களுக்கான செய்தியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்வதற்கு முன்பு கிலானி ஒரு கெளரவமான வெளியேற்றத்தைத் வேண்டி அதிலிருந்து வெளியேறினார்.