Latest National News உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர் நகரில் உள்ள ஒரு கிராமத்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் அதற்கு காரணமானவர்களின் பெயர்களை தன் கையில் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார்.
கடந்தாண்டு அந்தப் பெண் மூன்று ஆண்களால் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் வெளியே இருந்தனர் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் தந்தை, பிணையில் வெளியே வந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கை திரும்பப்பெறுமாறு தன் மகளைத் தொடர்ந்து அச்சுறுத்தியதாகவும் துன்புறுத்தியதாகவும் காவல்துறையில் புகாரளித்தார்.
அவர் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வட்ட அலுவலர் குல்தீப் குமார் தெரிவித்தார்.
இதையு படிக்கலாமே: 6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்புணர்வு - மருந்தக உரிமையாளர் கைது!