ETV Bharat / bharat

'உடல் நலனே உண்மையான செல்வம்' - ஆரோக்கியம் குறித்து காந்தியின் பார்வை - Gandhi 150: Gandhi's Health communication

காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் உடல்நலம் குறித்து காந்தியின் பார்வையை டாக்டர் கிருஷ்ணவீர் அபிஷேக் நமது ஈடிவி பாரத் செய்திக்கு எழுதிய கட்டுரை இதோ...

Gandhi
author img

By

Published : Sep 12, 2019, 8:50 AM IST

காந்தி விடுதலை போராட்ட வீரராக இந்திய பொதுவாழ்வில் காணப்பட்டாலும், சிறந்த உணவு முறை வல்லுநராகவும் கருதப்பட்டார். வாழ்நாள் முழுவதும் சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தி அயராது ஈடுபட அவரது உடல்நலன், மனநலன் துணை நின்றது என்பதில் சந்தேகமில்லை. உடலில் உறுதித்தன்மை பல நூறு மைல்கள் நடைபயணம் மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், தனது உணவுப் பழக்கத்தின் மூலம் அதைச் சாதித்துக்காட்டியவர் காந்தி.

காந்தியின் உணவுப் பழக்கம் தொடர்பான முக்கிய குறிப்புகள்

1942-44 காலகட்டத்தில் புனே நகரில் உள்ள ஆகா கான் அரண்மனையில் தனது உணவுப் பழக்கம் தொடர்பாக முக்கிய குறிப்புகளை எழுதியுள்ளார் காந்தி. அதை சுசீலா நய்யார் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இயற்கையோடு இயைந்த வாழ்வையே விரும்பிய காந்தி

இந்திய மரபு சார்ந்த நூல்களிலிருந்து தனது உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்கத் தொடங்கிய காந்தி, பின்னாளில் தான் கடைப்பிடித்த பிரம்மச்சரிய வாழ்வு சிறப்பாக செயல்பட உணவு முறையே முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். உண்ணாநிலை என்பது உணவு தவிர்த்தல் மட்டும் இல்லை, ஆரோக்கிய கேடான செயல்களிலிருந்தும் விடுபடுதல் எனவும் அறிவுறுத்தியிருந்தார். மேலும், இயற்கையின் பஞ்ச பூதங்களையும், உடலின் ஐம்புலன்களையும் ஒப்பிட்டு இயற்கையுடன் இயைந்த வாழ்வை மேம்படுத்தவே விரும்பினார் காந்தி.

உணவையே நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்திய காந்தி

அஜீரணக் கோளாறே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் எனக் குறிப்பிட்ட காந்தி, சைவ உணவு முறையை தீவிரமாகக் கடைப்பிடித்தார். தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், பால் சார்ந்த பதார்த்தங்கள் போன்ற உணவுகளை மட்டுமே அவர் விரும்பி உட்கொண்டார். தனது நோய்களுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உணவையே மருந்தாகப் பயன்படுத்தினார் காந்தி. மதுப்பழக்கம், போதைப் பழக்கம், புகையிலை போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அவர் அறவே ஒதுக்கினார்.

யோகாவில் நாட்டம் செலுத்திய காந்தி

நல்ல மன நலனே நல்ல உடல் நலனுக்கான அடிப்படை என்று நம்பிய காந்தி, மனதை எப்போதும் நேர்மறை எண்ணத்தில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அபத்தமான பேச்சு, பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், யோகா போன்ற உடற்பயிற்சி மேற்கொள்வதில் நாட்டம் செலுத்தினார். 'உடல் நலனே மெய்யான செல்வம்; தங்கமோ வெள்ளியோ அல்ல' என்று தொடர்ச்சியாகப் பேசியவர் காந்தி.

Intro:Body:

gandhi 150

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.