டெல்லி: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி காட்சி மூலம் ராஜஸ்தானில் சாலை திட்ட வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.
இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாயிரத்து 341 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 127 கி.மீ. தொலைவிலான சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கிவைக்கிறார்.
அனைத்து மாநிலத்திற்குமான தொடர்புகளை அதிகரித்தல் மற்றும் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல் என்ற முக்கிய நோக்கத்துடன் தொடங்கவுள்ள இந்தத் திட்ட விழாவில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய அமைச்சர் வி.கே. சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ள உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழில் மேம்பாட்டிற்கான 4 துறைகளைச் சீராக பெற்ற நாடு இந்தியா - நிதின் கட்கரி