ETV Bharat / bharat

பசு இறந்த துக்கம் தாங்காமல் ஈமக் காரியம் செய்த குடும்பம்

ஹைதராபாத்: பன்னிரண்டு வருடங்கள் பாசமாக வளர்த்த பசு இறந்ததால் மனிதர்களுக்குச் செய்வது போலவே பசுவுக்கும் ஈமக்காரியம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பசு
author img

By

Published : Aug 16, 2019, 3:24 PM IST

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவர் உடலை அடக்கம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் 12 வருடமாக ’லட்சுமி’ என்ற பசுவினை வளர்த்து வந்துள்ளார். ராம்பாபுவும், அவரது குடும்பத்தினரும் லட்சுமியை தங்களது குடும்பத்தில் உள்ள ஒருவரை போன்று பாசத்துடன் வளர்த்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட லட்சுமிக்கு, ராம்பாபு முறையான சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.

இதை தொடர்ந்து உயிருக்கு உயிராக வளர்த்த பசு உயிரிழந்ததால் ராம்பாபுவும், அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வது போன்று ஈம காரியங்களை நுழிவிடு என்ற இடத்தில் புதைத்தனர்.

பசுவின் மீதுள்ள பாசத்தால் அதற்கு மனிதர்களை போல் ஈமக்காரியம் செய்து புதைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.