பி.எஸ்.எல்.வி-சி 48 ராக்கெட் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் விண்வெளித் தளத்தில் இருந்து இன்று (டிச11) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று (டிச.10) மாலை 4.40 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பி.எஸ்.எல்.வி-சி 48 ராக்கெட் மூலம் புவியை கண்காணிப்பதற்கான ரிசாட் (RISAT-2BR1) இன்று மதியம் 3.25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் 638 கிலோ கிராம் எடை கொண்டது. இது புவிவட்ட பாதையில் 576 கிலோ மீட்டர் தொலைவில் 37 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதனுடன் அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்களும், இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இஸ்ரோ பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. இது பி.எஸ்.எல்.வி.யின் 50ஆவது விண்வெளிப் பயணமாகும். அத்துடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும் 75ஆவது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்திராயன்-3 திட்டம் நிச்சயம் உண்டு - இஸ்ரோ தலைவர் சிவன்