தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் நால்வரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது உடலும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் நான்கு பேரை காவலர்கள் இன்று கைது செய்தனர். அவர்கள் பெயர் முகம்மது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் மற்றும் ஜிந்தக்குந்தா ஆகும்.
இவர்கள் நான்கு பேரும் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் அப்பெண்ணை கொன்றுள்ளனர். இதையடுத்து அவரின் உடலுக்கு தீ வைத்துள்ளனர்.
அந்த பகுதி அருகே சென்றவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
-
Look at the mindset of #Telangana police.They told the father that she might have eloped with someone. @DgpTelangana @TelanganaCMO I expect serious, sever and quick action against the officials who didn't act on the missing complaint. #HyderabadHorrer
— Rekha Sharma (@sharmarekha) November 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Look at the mindset of #Telangana police.They told the father that she might have eloped with someone. @DgpTelangana @TelanganaCMO I expect serious, sever and quick action against the officials who didn't act on the missing complaint. #HyderabadHorrer
— Rekha Sharma (@sharmarekha) November 29, 2019Look at the mindset of #Telangana police.They told the father that she might have eloped with someone. @DgpTelangana @TelanganaCMO I expect serious, sever and quick action against the officials who didn't act on the missing complaint. #HyderabadHorrer
— Rekha Sharma (@sharmarekha) November 29, 2019
அந்த தகவலின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளை சோதனைக்குள்ளாக்கிய போது, கொடூர கொலையாளிகளான இந்த நால்வரும் காவலர்கள் வசம் சிக்கினர்.
இவர்கள் தொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவர் கொலை வழக்கை கையில் எடுத்த தேசிய பெண்கள் ஆணையம்!