பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான ரகுவான்ஷ் பிரசாத் சிங் (75) சில நாள்களுக்கு முன் தீவிர காய்ச்சலாலும், சளியாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடுமோ என்று சந்தேகித்த மருத்துவர்கள், இவரது ரத்த மற்றும் சளி மாதிரிகளை கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனை முடிவில் இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும், இவருக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிகாரில் பலர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கின்றனர்.