இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பதால், மற்ற உடல்நலம் சார்ந்த பிரச்னைகளைச் சந்திக்கும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. இதன் காரணமாக மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாமலேயே, உயிரிழப்புகள் நேர்வதும் அதிகரித்துவருகிறது.
அதனை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஷாஹித் சித்திக்கின் உறவினர் ஒருவர், வென்டிலேட்டர் இல்லாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை ஷாஹித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
She was neither provided ICU care nor put on a ventilator despite being very critical. Hospitals are not even trying to save people. I feel sorry for the people of Delhi. Let’s not play politics & go into blame game, Delhi needs close coordination between State & central govt https://t.co/qtMEz4FGy2
— shahid siddiqui (@shahid_siddiqui) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">She was neither provided ICU care nor put on a ventilator despite being very critical. Hospitals are not even trying to save people. I feel sorry for the people of Delhi. Let’s not play politics & go into blame game, Delhi needs close coordination between State & central govt https://t.co/qtMEz4FGy2
— shahid siddiqui (@shahid_siddiqui) June 7, 2020She was neither provided ICU care nor put on a ventilator despite being very critical. Hospitals are not even trying to save people. I feel sorry for the people of Delhi. Let’s not play politics & go into blame game, Delhi needs close coordination between State & central govt https://t.co/qtMEz4FGy2
— shahid siddiqui (@shahid_siddiqui) June 7, 2020
தனது உறவினரை மருத்துவமனைகளில் அனுமதிக்காததது குறித்து ஷாஹித் சித்திக் காட்டமாக ட்வீட் செய்திருந்தார். அதில், "கோவிட்-19 தொற்றை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். ஒருவரை மற்றொருவர் குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.
-
Stop doing politics on Covid19. Stop the blame game. If our govts, media, bureaucracy, health providers, NGOs, social system, & every institution does not stand up unitedly, we are going to have a huge crisis on our hands. It’s a National Emergency.
— shahid siddiqui (@shahid_siddiqui) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stop doing politics on Covid19. Stop the blame game. If our govts, media, bureaucracy, health providers, NGOs, social system, & every institution does not stand up unitedly, we are going to have a huge crisis on our hands. It’s a National Emergency.
— shahid siddiqui (@shahid_siddiqui) June 7, 2020Stop doing politics on Covid19. Stop the blame game. If our govts, media, bureaucracy, health providers, NGOs, social system, & every institution does not stand up unitedly, we are going to have a huge crisis on our hands. It’s a National Emergency.
— shahid siddiqui (@shahid_siddiqui) June 7, 2020
அரசு, ஊடகம், நிர்வாகம், சுகாதாரப் பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றால்தான் இதைத் தடுக்க முடியும். நாம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இது ஒரு தேசிய பேரிடர்" என்று பதிவிடுள்ளார்.
இதேபோல டெல்லியில் கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்க்க மருத்துவமனைகள் மறுத்ததால், அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்ததும் கவனிக்கத்தக்கது.