ETV Bharat / bharat

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு கரோனா? - ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு கரோனா

ஜெய்ப்பூர்: கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகியை சந்தித்த காரணத்தால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

Raje
Raje
author img

By

Published : Mar 20, 2020, 9:41 PM IST

சமீபத்தில் லண்டனில் இருந்து லக்னோவுக்கு திரும்பிய பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் பல விழாக்களில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கலந்துகொண்ட விழாவில் கனிகா கபூர் பங்கேற்றுள்ளார்.

விழாவில் வசுந்தரா ராஜேவுடன் கனிகா
விழாவில் வசுந்தரா ராஜேவுடன் கனிகா

அப்போது வசுந்தராவுடன் அவர் மகன் துஷ்யந்த் சிங், மருமகள் ஆகியோர் உடனிருந்தனர். இதனால் இவர்களுக்கும் நோய் பரவியிருக்கும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக ராஜே தெரிவித்துள்ளார்.

  • While in Lucknow, I attended a dinner with my son Dushyant & his in-laws. Kanika, who has unfortunately tested positive for #Covid19 was also a guest.

    As a matter of abundant caution, my son & I have immediately self-quarantined and we’re taking all necessary precautions.

    — Vasundhara Raje (@VasundharaBJP) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நானும் என் மகனும் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.