ETV Bharat / bharat

டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ : ஜன.,27 - இல் பாஜவில் இணைவதாக தகவல்! - பாஜவில் இணையும் நமச்சிவாயம்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனது சட்டப்பேரவை பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் முகாமிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கட்சியில் ஜன.27 ஆம் தேதி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முன்னாள்  எம்எல்ஏ

author img

By

Published : Jan 27, 2021, 5:07 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் நமச்சிவாயம். இவர் தனது வில்லியனுர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார்.

பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜன.26) புதுச்சேரியில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டார்.

இன்று(ஜன.27), அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளார்.இன்று அவர் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: குடியரசு தினத்தில் பறிக்கப்பட்ட சுதந்திரம்; காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடரும் இருள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.