ETV Bharat / bharat

சிவ சேனா கட்சியின் முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை - Shiv Sena unit shot dead

போபால்: மத்தியப் பிரதேச சிவ சேனாவின் முன்னாள் தலைவர் ரமேஷ் சாஹூ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சிவ சேனா கட்சியின் முன்னாள் தலைவர்
சிவ சேனா கட்சியின் முன்னாள் தலைவர்
author img

By

Published : Sep 2, 2020, 4:55 PM IST

மத்தியப் பிரதேச மாநில சிவ சேனா கட்சியின் முன்னாள் தலைவர் ரமேஷ் சாஹூ, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தூர் - காந்துவா சாலையில் உள்ள உம்ரிகேதா கிராமத்தில், ஒரு உணவு விடுதியை அவர் நடத்திவந்துள்ளார்.

நேற்றிரவு விடுதிக்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் ரமேஷ் சாஹூவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்து அவர்கள் தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷ் சாஹூவை கண்ட விடுதி பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை கைது செய்ய காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட காரணம் குறித்து தெரியவில்லை. விசாரணை நடத்திவருகிறோம். குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பிகாரில் நிதிஷ் குமாருக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.