ETV Bharat / bharat

நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை

புதுச்சேரி, கோரிமேடு பகுதியில், இன்று (செப்.30) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் கவுன்சிலர் சுந்தர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Former councilor manthoppu sunder murdered while walking in puducherry

author img

By

Published : Sep 30, 2020, 3:07 PM IST

புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (எ) மாந்தோப்பு சுந்தர். முன்னாள் கவுன்சிலரான இவர் கோரிமேடு ஆர்.டி.ஓ.அலுவலகம் அருகே தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட சுந்தர், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வழிமறிக்கப்பட்டார். இதையடுத்து, அந்த நபர்கள் சுந்தரை சூழ்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கொலை செய்த நபர்கள் தப்பியோடினர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து, நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சிலர் கோரிமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், சுந்தரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட்: மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.