உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை நியமன உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்பு பரிந்துரைத்திருந்தார். தற்போது, அவரின் பரிந்துரை ஏற்கப்பட்டு இன்று காலை 11 மணியளவில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகாய் பதவியேற்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது அயோத்தி, ரஃபேல் போர் ஜெட் ஒப்பந்தம், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருந்தது கவனிக்கத்தக்கது.
கோகாய் 2019ஆம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார். மேலும்,மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாட்டின் முதல் முன்னாள் தலைமை நீதிபதி இவர்தான் என்பது கூடுதல் தகவல்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இன்று முதல் அமர்ந்து அருந்தும் மதுபான கடைகள் மூடல்!