புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஆனந்த் பாலாஜியை சரமாரியாக வெட்டி விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த ஆனந்த் பாலாஜி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உடைந்த கியர் ராடு, பாதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ்...பரிதவித்த உயிர்'