ETV Bharat / bharat

பொருளாதாரப் பிரச்னைகளை சரி செய்ய குழு அமைக்க வேண்டும்: உ.பி., முதலமைச்சருக்கு பிரியங்கா கடிதம்! - ஊரடங்கு உத்தரவு

டெல்லி: கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளை சரி செய்வதற்கு உடனடியாக பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு புனரமைப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

form-an-economic-reconstruction-taskforce-immediately-priyanka-gandhi-writes-to-up-cm

author img

By

Published : Apr 17, 2020, 6:02 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பொருளாதாரப் பிரச்னைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''கரோனா வைரஸால் நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. கண்ணாடி, பித்தளை, நெசவு, தோல், பால், மண்பண்டங்கள், மீன் பிடிப்பு என அனைத்து சிறு குறு தொழில்களும் பாதிப்பை சந்தித்துள்ளன.

பிரியங்கா காந்தி கடிதம்
பிரியங்கா காந்தி கடிதம்

இந்தப் பொருளாதார சுனாமியை சரிசெய்வதற்காக மாநில அரசு உடனடியாக பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு ''பொருளாதார புனரமைக்குக் குழு'' ஒன்றை அமைக்கவேண்டும். அந்தக் குழுவினர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டத்தை உடனடியாக வகுக்கவேண்டும்.

இந்த கரோனா வைரஸ் சமூகத்தின் அத்தனை பிரிவினரையும் பாதித்துள்ளது. இதனால் சமூகத்தில் உள்ள பொருளாதாரம் மற்றும் அடிப்படை பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் உணவு, தங்குமிடன் ஆகியவற்றை முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும்.

கரோனா வைரஸால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசு சார்பாக நிவாரணம் வழங்கவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். எதிர்காலத்தில் கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு அரசு அளிக்கவேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள், பதிவு செய்திடாத தொழிலாளர்கள் ஆகியோருக்கு ரேஷன் நிவாரண உதவிகள் சென்று சேரவில்லை. அதனால் ரேஷன் கார்டுகள் இல்லை என்றாலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றை எதிர்த்துப் போராட தொழிலதிபர்கள் உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.