ETV Bharat / bharat

மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தம்லீக் ஜமாஅத் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு!

டெல்லி: சமய மாநாட்டில் பங்கேற்ற 35 நாட்டவர்களை தடுப்புப் பட்டியலில் வைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தம்லீக் ஜமாஅத் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

foreign-nationals-from-35-countries-who-attended-nizamuddin-congregation-move-sc-against-blacklisting

author img

By

Published : Jun 21, 2020, 7:08 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் முதல் மக்கள் ஒன்று கூடுவதற்கும், மத வழபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லி நிசாமுதின் பகுதியில் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விதிமுறைகளை மீறி சமய மாநாட்டில் பங்கேற்றனர். இதில், பலர் கரோனா வைரஸினால் பாதிகப்பட்டிருந்ததையடுத்து, மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கும் தொற்று பரவியது.

இந்த மாநாடு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று வேகமாக பரவ காரணமாக அமைந்தது என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், மாநாட்டில் விசா விதிமுறைகளை மீறி பங்கேற்றதாக 35 நாடுகளைச் சேர்ந்தவர்களை இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடுப்புப் பட்டியலில் வைத்துள்ளது.

இவர்கள் பலர் சொந்த நாடுகளுக்கு செல்ல இயலாமல் தற்போது வரை இந்தியாவிலேயே கட்டாயமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசால் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள் புஜைல் அஹ்மத் அய்யூபி மற்றும் ஆஷிமா மாண்ட்லா மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், "மத்திய அரசால் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக வெளி விவகார அமைச்சகத்திடம் அறிவுறுத்தல்கள் கோரப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஃபரீதா சீமா என்ற பெண், தான் ஏழுமாத கர்ப்பிணியாக உள்ளேன். கடந்த மார்ச் மாதத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். தன்னால் இயல்பாக வெளியில் நடமாட முடியவில்லை. தங்கள் மீது மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தன்னுடைய பிரசவத்திற்கு தாய்நாடு செல்ல விரும்புகிறேன். அதற்கு இந்திய அரசு உரிய அனுமதி அளிக்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தடுப்புப் பட்டியலில் வைத்திருப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தன்னிச்சையான முடிவு என குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளிநாட்டைச் சேர்ந்த 960 பேர் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் நான்காம் தேதி 2, 500 வெளி நாட்டவர்களை தடுப்புப் பட்டியலில் வைத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட வெளி நாட்டவர்களுக்கு எவ்வித அறிவிப்புகளும் அளிக்கப்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டம் 21ஐ மீறும் செயலாக கருதப்படுகிறது.

டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்டு தற்போது இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரை 10 வருட காலத்திற்கு தடுப்புப் பட்டியலில் வைத்துள்ளதாகவும் தெரிகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள வெளி நாட்டினர் மீண்டும் அவர்களது நாடுகளுக்குத் திரும்பவும், மத்திய அரசின் தடுப்புப் பட்டியல் குறித்து ஆராயவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.