ETV Bharat / bharat

மேற்கு வங்க ஆளுநரை கலாய்க்கும் திரிணாமுல் எம்.பி!

கொல்கத்தா : ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் முதலில் அரசியலமைப்பின் அடிப்படை வாசிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

For post of governor, person must have the basic reading of Constitution: TMC MP
மேற்கு வங்க ஆளுநரை கலாய்க்கும் திரிணாமுல் எம்.பி!
author img

By

Published : May 15, 2020, 11:13 PM IST

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை தாக்கும் விதமாக அவர் இதனை தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மஹுவா மொய்த்ரா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “மாநில ஆளுநர் பதவி நிரப்பப்படாமல் இருக்கும் சூழலில் அதற்கு விண்ணப்போருக்கு தேவையான தகுதிகள்- 1. அரசியலமைப்பின் அடிப்படை வாசிப்பு. 2. மாநில அரசின் பதவிகளைக் கண்ணியமாக மதிக்கும் மாண்பு, கண்மூடித்தனமாக வாய்க்கு வந்ததை பேசாதிருத்தல். 3. அன்றாட வாழ்க்கையில் அரசியல் எஜமானர்களால் ஏற்படும் அவமரியாதைகள் குறித்து தெரிந்துகொண்டு சுய மரியாதை குறைவில்லாமல் நடந்துகொள்ளுதல்” எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் இந்த ட்வீட் தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

  • Situation Vacant- 1 post of Governor for State of WB

    Qualifications reqd-
    1. BASIC reading of Constitution
    2. Ability to respect dignity of office & not shoot mouth off indiscriminately
    3. Modicum of self respect in daily life w/o fawning over political masters shamelessly

    — Mahua Moitra (@MahuaMoitra) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இருப்பினும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், “ஆளுநர் நியாயமான விஷயங்களைச் சொல்வதால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், அவரை அவமதிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அரசியலமைப்பு தந்த இந்த பதவியை இழிவுபடுத்த முயன்று வருகின்றனர். அரசியலமைப்பு விதிமுறைகளை புறக்கணிக்கும் விதமாக ஆளுநர் பதவிக்கு எதிரான இத்தகைய அறிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்றார்.

கடந்த இரண்டு மாதங்களாக, கோவிட்-19 நிலைமையைக் கையாள்வதில் மாநிலத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்க மாநில அரசும், ஆளுநர் மாளிகையும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பனிப்போர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெடிக்க தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : 'மக்களின் கைகளுக்கு நேரடியாகப் பணம் செல்வதை ஏற்க முடியாமல் மம்தா விமர்சிக்கிறார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.