உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக அலுவலகத்தை காணொலி மூலம் தொடக்கி வைத்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசுகையில், "ஒரு கட்சி ஒரு தனிநபரின் வீட்டிலிருந்து நடத்தப்பட்டால், அந்த கட்சி அந்த தனிநபரின் சொத்தாகும். இது போன்று பல கட்சிகள் தற்போது உள்ளன. அவர்களது குடும்பம்தான் கட்சியாகும். ஆனால், பாஜகவினரோ கட்சியை தங்களது குடும்பமாக பார்க்கின்றனர். உதாரணமாக காங்கிரஸ் கட்சியையே எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தங்கள் அம்மா, மகன், மகள், தம்பி, அக்கா என குடும்பத்தினரை பாதுகாக்கவே போராடிவருகின்றனர்.
ஆனால், உலகின் மிகப்பெரும் கட்சியான பாஜக இனிவரும் காலங்களிலும் ஒரே குடும்பமாக நிலைத்து நிற்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'உங்களுக்கு ஒன்னும் ஆகாது' - பாதுகாப்பு படையினரின் நெகிழ்ச்சி செயல்!